BREAKING : புரட்சி தலைவி ஜெயலலிதாவாகவே மாறிய கங்கனா ! “தலைவி” படத்தின் டிரெய்லர் !

23 March 2021, 1:56 pm
Quick Share

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் ஏ.எல்.விஜய் பிரமாண்டமாக இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.

தலைவி படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகிறார் என்பதும் அவருடைய கேரக்டர் இந்த படத்தில் முக்கியத்துவம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். படம் தொடங்கிய போது, ஜெயலலிதா போல் Get Up போட்டு போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளார். அதற்கு, கடும் விமர்சனங்கள் வந்தது. அதன் பிறகு வெளியான எல்லா போஸ்டர்களிலும், கங்கனா ரணாவத் அச்சு அசல் ஜெயலலிதா போல் இருந்தார்.

இந்நிலையில் இன்று நடிகை கங்கானாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் டிரெய்லர்கள் வெளியாகியுள்ளது.

Views: - 19

7

1