தளபதி 65இல் நடிக்கவிருக்கும் நகைச்சுவை காம்போ.! அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…!

31 January 2021, 1:51 pm
Quick Share

தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி இந்நாள் வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்குவதாக தகவல்கள் வெளியாகியது.

இன்னும் பெயரிடப்படாத அந்த படம் தளபதி 65 என அழைக்கப்படுகிறது. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளனர். அனிருத் இசையமைக்க உள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளார். தற்போது அந்த படத்தில் நடிக்கயிருக்கும் 2 நகைச்சுவை நடிகர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது முந்தைய படத்தில் நெல்சன் யோகிபாபுவை நடிக்க வைத்து படத்தின் நகைச்சுவை காட்சிகளை சிறப்பாக எடுத்திருந்தார். அந்த வரிசையில் தளபதி 65 படத்தில் யோகிபாபுவையும் விடிவி கணேஷ் ஆகியோரையும் நடிக்க வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய் யோகிபாபுவோடு சர்க்கார், மெர்சல் ஆகிய படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 29

0

0