என்னது ஃபர்ஸ்ட் ஷூட்டே ரஷ்யாவா? தளபதி 65 அப்டேட்!

27 February 2021, 11:27 pm
Quick Share

விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி65 படத்தின் முக்கியமான அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் தளபதி65. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் பட த்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை பூஜா ஹெக்டேயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு, ராஷ்மிகா மந்தனாக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பூவையார், குக் வித் கோமாளி புகழ், வித்யுத் ஜம்வால் அல்லது நவாசுதீன் சித்திக்,

அருண் விஜய் அல்லது சியான் விக்ரம் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அன்பறிவு இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர். கேஜிஎஃப் படத்திற்கு இருந்த ஆக்‌ஷன் காட்சிகளை விட இந்தப் படத்திற்கு அதிகளவில் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு, மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கு முன்னதாக நண்பன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி65 படம் முழுக்க முழுக்க பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த மாஸ்டர் படமே விஜய்க்கு முதல் பான் இந்தியா படமாக அமைந்துள்ளது. 2ஆவது முறையாக அதுவும் ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி உருவாகும் தளபதி65 படம் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது. இந்த நிலையில், தளபதி65 படம் முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, முதல்கட்ட படப்பிடிப்பே ரஷ்யாவில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்புற்கு விஜய் இன்று லுக் டெஸ்ட் செய்துள்ளார்.

Views: - 9

1

0