அட்ராசக்க… இது சூப்பர் அப்டேட்டா இருக்கே!! தளபதி 69 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?

Author:
26 September 2024, 3:47 pm

நடிகர் விஜய் தற்போது அரசியலில் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி தொடர்ந்து தனது அரசியல் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்னதாக நடிகர் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

thalapathy-69

அதை எடுத்து கடைசி திரைப்படமாக தளபதி 69 படம் உருவாகி வருகிறது. இதனை ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். எச் வினோத் இயக்கத்தில் கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கி வரும் இந்த திரைப்படம் தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும்.

இந்த திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் புதிய போஸ்டருடன் இணையத்தில் வெளியானது. தளபதி 69 என தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் போஸ்டரில் அண்மையில் வெளியானது. அதில் நடிகர் விஜய்யின் கையில் கொழுந்து விட்டு எரிகின்ற தீப்பந்தத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

pooja hegde - updatenews360.png 2

மேலும் படிக்க: சிவகார்த்திகேயனிடம் அதை தெரிந்துக்கொள்ள ஆசை….Open’அ கூறிய கீர்த்தி சுரேஷ்!

தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்திற்கு நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் முன்னதாக நடிகர் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பை அண்மையில் தான் முடித்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!