வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் வீடியோ லீக்…! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: kavin kumar
15 November 2022, 1:20 pm

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி மற்றும் சென்னையில் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக்பாஸ் பிரபலம் மற்றும் மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் தளபதி விஜய்.

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் படத்தின் முதல் சிங்கள் ரொமான்டிக் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிகள் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!