மாஸ்டர் தியேட்டரைவிட ஓடிடியில் ரன்னிங் டைம் கொஞ்சம் அதிகமாக இருக்கே?

27 January 2021, 6:39 pm
Quick Share

விஜய் நடித்த மாஸ்டர் படம் வரும் 29 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர் படம் கொரோனா லாக்டவுன் காரணமாக 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன், தீனா, சாய் தீனா, பூவையார், நாசர் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கல்லூரி, போதைப் பொருள், சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆகியவற்றை மையப்படுத்தி வெளியான மாஸ்டர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மாஸ்டர் படம் திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் வெறும் 3 நாட்களில் ரூ.100 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது.
தற்போது மாஸ்டர் படம் வெளியாகி 14 நாட்கள் ஆன நிலையில்,

13 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.225 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. மாஸ்டர் படம் திரையரங்கில் 2 மணி நேரம் 59 நிமிடம் வரை ஓடுகிறது. ஆனால், இதைவிட அதிகமாக அமேசான் பிரைம் வீடியோவில் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாஸ்டர் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 நிமிடம் என்று கூறப்பட்டுள்ளது. வரும் 29 ஆம் தேதி மாஸ்டர் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0