பாகுபலி 2 ஷேர் வசூலை முறியடித்த தளபதி விஜய்யின் மாஸ்டர்!

5 February 2021, 12:48 pm
Quick Share

விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படம் பிரபாஸின் பாகுபலி 2 படத்தின் தமிழக ஷேர் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு திரைக்கு வந்த படம் மாஸ்டர். கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 ஆம் தேதி வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, நாசர், சஞ்சீவ், ஸ்ரீமன், சாந்தணு, பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன், பூவையார், கௌரி கிஷான், பிரிகிதா, கேபிஒய் தீனா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.


உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.250 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.141 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது. இது ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஆகியோரது நடிப்பில் வந்த பாகுபலி 2 படத்தின் வசூலை விட குறைவு.
அதாவது, பாகுபலி 2 படம் தமிழகத்தில் ரூ.148 கோடி வரையில் வசூலித்துள்ளது. எனினுன், மாஸ்டர் படத்திற்கு தமிழகத்திற்கு ஷேர் மூலமாக ரூ.80 கோடி கிடைத்துள்ளது. ஆனால், பாகுபலி 2 படத்திற்கு ரூ.78 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்தமாக விஜய்யின் மாஸ்டர் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.221 கோடி வசூல் குவித்துள்ளது (ரூ.80 கோடி ஷேர் + ரூ.141 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல்). இதன் மூலமாக, பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் முறியடித்துள்ளது
ஷேர் மூலமாக தமிழகத்தில் அதிக வசூல் குவித்த படங்களில் விஜய்யின் பிகில் ரூ.83 கோடி வசூல் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 2ஆவது இடத்தில் வெறும் 19 நாட்களில் மாஸ்டர் படம் ரூ.80 கோடி வசூலித்துள்ளது.
ஷேர் மூலமாக தமிழகத்தில் வசூலித்த படங்களில் பட்டியல் இதோ….
பிகில் – ரூ.83 கோடி
மாஸ்டர் – ரூ.80 கோடி (19 நாட்கள்)
பாகுபலி 2 – ரூ.78 கோடி
சர்கார் – ரூ.76 கோடி

மெர்சல் – ரூ.72.5 கோடி
விஸ்வாசம் – ரூ.69.6 கோடி
எந்திரன் – ரூ.63 கோடி
2.0 – ரூ.53 கோடி
பேட்ட – ரூ.53 கோடி
தெறி – ரூ.51 கோடி

உலகளவில் மாஸ்டர் வசூல் – ரூ.250 கோடி
தமிழகத்தில் மாஸ்டர் வசூல் – ரூ.141 கோடி
தமிழகத்தில் மாஸ்டர் ஷேர் – ரூ.80 கோடி
உலகம் முழுவதும் மாஸ்டர் படம் வெளியாகியிருந்தாலும், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த திங்களன்று வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மாஸ்டர் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு: ஷேர் வசூல் என்பது விநியோகஸ்தரின் பங்கு. அதாவது மல்டிப்ளக்ஸ் மற்றும் ஒரேயொரு திரையரங்கு வைத்துள்ள உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகையை படத்தின் நெட் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலிருந்து கழித்த பிறகு கணக்கிடப்படுகிறது. ஒரு படத்தின் உண்மையான லாபம் மதிப்பிடப்படுவது என்பது அதன் ஷேர் பங்கிலிருந்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 3

0

0