நான் நடிச்சதுல மொக்கை படம் இதுதான்; டாப் ஹீரோயின் சொன்ன முன்னணி ஹீரோ படம்;

Author: Sudha
20 July 2024, 12:29 pm

தமன்னா என்ற பெயரைக் கேட்டாலே மில்க் பியூட்டி என ரசிகர்கள் சொல்வார்கள்.கல்லூரி படத்தில் ஆரம்பித்த இவரது திரைப் பயணம் தற்போது வரை டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது.பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் தமன்னா.

தமன்னாவிடம் எடுக்கப்பட்ட ஒரு நேர்காணலில் நீங்கள் நடித்த கேரக்டரில் எது உங்களுக்கு பிடிக்கவில்லை. நீங்கள் இன்னும் நன்றாக நடித்திருக்கலாமே என்று நினைத்த படம் எது?என்னும் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தமன்னா சில திரைப்படங்களில் அப்படி நினைத்து உண்டு. தமிழில் சொல்லப் போனால் சுறா திரைப்படத்தில் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாமோ எனத் தோன்றியது. அதில் சில காட்சிகள் எனக்கு பிடிக்கவில்லை என சொன்னார். இதைக் கேட்ட பார்வையாளர்கள் சிரித்தனர். முன்னணி ஹீரோ விஜய் படத்தை இப்படி டேமேஜ் பண்ணிடடாங்களே தமன்னா என்று அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?