தமன்னா டிரஸ் இவ்ளோ விலையா? அப்படி என்னதான் பா இருக்கு?? வாய் பிளக்கும் ரசிகர்கள்,..

Author: Sudha
22 July 2024, 11:49 am

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா மும்பையில் கோலாகலமாக சென்ற வாரம் நடந்தது.இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். மங்கள் உத்சவ்’ நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பாட்டியா கலந்து கொண்டார்.தன் காதலருடன் வந்த நடிகை தமன்னா மிகவும் கிளாமராக உடை அணிந்து வந்தார் அவர் கருப்பு மற்றும் தங்க நிறத்தால் ஆன லெஹங்கா அணிந்திருந்தார்.

தமன்னாவின் உடையானது “டிசைனர் லேபிள் டோரானி”யால் தயாரிக்கப் பட்டது. அதன் விலை 3.85 லட்சம் ரூபாய்.தமன்னா அணிந்திருந்த லெஹங்காவின் பெயர் பத்ரா நலிகா லெஹெங்கா’ பழைய பாலிவுட் விண்டேஜ் தோற்றம் தரும் படி வடிவமைக்கப்பட்டது.

அவரது லெஹங்கா ஒரு தேவதை போன்ற பாணியில் வடிவமைக்கப்பட்டது.கருப்பு லெஹங்காவுக்கு மேட்ச் ஆகும் படி அழகான தங்க ஜிமிக்கி மற்றும் நடுத்தர அளவிலான நெற்றி சுட்டி இடது கையில் பிரேஸ்லெட் மட்டும் அணிந்து வந்தார்.வேறு எந்த நகைகளையும் தமன்னா அணியவில்லை. தமன்னா டிரஸ் விலையைக் கேட்ட பலரும் ஒரு முறை அணியும் ஆடைக்கு இவ்ளோ விலையா?என்று வாய் பிளக்கின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!