நடிகர் விஜய் வாழ்க்கையில் மீண்டும் அந்த நடிகை… வெடித்தது பூகம்பம் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2023, 12:31 pm

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளவர் நடிகர் விஜய். அண்மையில் இவரது குடும்பத்தை பற்றிய செய்திகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

கீர்த்தி சுரேஷை வைத்து இணைத்து பேசிய நெட்டிசன்களுக்கு பிரபல பத்திரிகையாளர் தகுந்த பதிலடி கொடுத்திருந்தார்.

இந்தநிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் த்ரிஷா ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் இருந்து திடீரென நடிகை திரிஷா கிளம்பினார்.

காஷ்மீரில் இருந்து கிளம்பிய திரிஷா மும்பை விமானநிலையத்தில் இருந்து வெளியிட்ட புகைப்படம் பல சர்ச்சைகளை கிளப்பியது. அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டாரா என்றும் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால், ஓரிரு நாட்களில் மீண்டும் காஷ்மீருக்கு சென்று லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்டார் திரிஷா. காஷ்மீரின் குளிர் தாங்கமுடியாமல் தான் திரிஷா அங்கிருந்து கிளம்பி மும்பை சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார். ‘லியோ படத்தின் படப்பிடிப்பில் இருந்து திரிஷா திடீரென கிளம்பி மும்பைக்கு சென்றதற்கு காஷ்மீரின் குளிர் மட்டும் காரணம் இல்லை. அங்கு எதோ ஒரு பிரச்சனை நடந்துள்ளது. விஜய் குடும்பத்தில் ஒரு சலசலப்பு சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. நடிகை திரிஷா தான் அந்த சலசலப்புக்கு காரணம் என்பது போல் தெரிவிக்கின்றனர்.

இவர் காஷ்மீர் சென்றதும், எதோ ஒரு அழுத்தம் சென்னையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே திரிஷா படப்பிடிப்பில் இருந்து கிளம்பினார் என முதலில் கூறப்பட்டது.

ஆனால், இவை யாவும் உண்மையில்லை என்று லியோ படக்குழு மருத்துள்ளதாகவும்’ பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…