பிக்பாஸ் வீட்டில் விஷப்பாம்பு அந்த பொண்ணுதான் : குயின்ஸிக்காக மெனக்கெட்டு ராபர்ட் செய்யும் அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2022, 1:22 pm

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து தற்போது குயின்ஸி வெளியேறியுள்ளார்.

அந்த வீட்டில் தேவையில்லாத ஆணியாக இருந்தவர் ராபர்ட் மாஸ்டர். ரச்சித்தாவுக்கு பிட்டை போட்ட ராபர்ட் அவரின் பின்னாலே சுற்றிக்கொண்டு இருந்தார். ரொமான்ஸ் என்ற பெயரில் ராபர்ட் மாஸ்டர் செய்தது கிரிஞ்சாக இருந்தது.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய குயின்ஸி குறித்து ராபர்ட் மாஸ்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

நான் குயின்ஸி என் மகள் என்று சும்மா சொல்லவில்லை, உண்மையில் குயின்ஸியை என் மகளாகத்தான் பார்க்கிறேன் விரைவில் நான் தொடங்க இருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு குயின்ஸி என்று என் மகளின் பெயரைத்தான் வைப்பேன் என்றார். அதேபோல, என் முன்னாள் காதலியும் ரச்சித்தா போலவே மூக்குத்தி போட்டு இருப்பாங்க அதனால் தான் அவங்களை எனக்கு பிடிக்கும் என்றார்.

மேலும், எப்படியோ நரிக்கூட்டத்திற்குள் இருந்து வெளியில் வந்து விட்டேன் என்றும், விஷம் உள்ள பாம்பு தனலட்சுமி, விஷம் இல்லாத பாம்பு ஷிவின், கழுகு அசிம், புலி மணி, யானை ஜனனி, முயல் ஏடிகே, முதலை விக்ரம், சிங்கம் போல வீட்டில் யாரும் இல்லை என ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் புட்டு புட்டு வைத்தார் ராபர்ட் மாஸ்டர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?