“அந்த விஜய் படத்தை இதனாலதான் ஒத்துக்கல…” – ஜோதிகா சொன்ன உண்மை !

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2021, 11:29 am
Mersal Jothika - Updatenews360
Quick Share

20 வருடங்களுக்கு முன் டாப் ஹீரோயினாக கலக்கி வந்த நடிகை ஜோதிகா, தன் காதல் கணவரான சூர்யாவை கரம் பிடித்த பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார், பின் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தார், அந்த படம் ஹிட் ஆகவே எல்லா மொக்க படங்களையும் நான்தான் நடிப்பேன் என்று Feminism என்னும் பாரம்பரியத்தை வளர்த்து வருகிறார்.

Second Innings -‌ இல் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து விட்டார். இந்த இன்னிங்சில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை மட்டுமே தேர்வு செய்து ஜோதிகா எல்லா இளைஞர்களையும் கடுபேற்றி வருகிறார்.

கடந்த வருடம் 2019, 2020 மட்டும் ராட்சசி, ஜாக்பாட், தம்பி, என மூன்று படங்களில் நடித்தார். அதில் தம்பி படம் மட்டும் சுமாராக போனது.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான, மெர்சல் படத்தில் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜோதிகா. ஆனால் அவர் திடீரென்று விலகுகிறார் என்று தெரிந்தும் விஜய் ரசிகர்கள் இவரை தாக்கியுள்ளார்கள். இது குறித்து பதிலளித்த போது, அட்லி கதை சொல்லும் போது ஜோதிகாவிற்கு அந்த ஸ்கிரிப்ட் பற்றி கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. மேலும் தனது கதாபாத்திரத்தின் மீது இருந்த வேறுபாடு காரணமாக தான் அந்த படத்தில் நடிக்கவில்லையோ, தவிர வேறு எந்த காரணமும் இல்லை என மனம் திறந்துள்ளார்

Views: - 974

10

7