“உள்ளுக்குள்ள இருக்குற உசுர உருவி எடுக்குது” வைரலாகும் கர்ணன் படத்தின் “தட்டான், தட்டான்” பாடல் !

Author: Udhayakumar Raman
11 March 2021, 6:55 pm
Quick Share

தனுஷின் அடுத்த படத்தை ’பரியேறும்பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார் . படத்தின் வெளியான இரண்டு பாடல்கள் ஆன, “கண்டா வர சொல்லுங்க, பண்டாரத்தி” என இரண்டுமே செம்ம ஹிட் அடிக்க, படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி அறிவித்துவிட்டார்கள்.

ஏற்கனவே தனுஷ் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் படம் வரும் ஜூன் மாதத்தில் நெட்பிளிக்ஸ் வலைதளத்தில் Release ஆகபோகிறது என்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்பது கூடுதலான சோகமான தகவல்.

சரி கர்ணன் படத்துக்கு வருவோம்…முதல் படத்தில் அழுத்தமான சமூக கருத்து ஒன்றை தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ், இந்த படத்தில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனையை கையில் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்சனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்தது.

அந்த கதையை மாரி செல்வராஜ் எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்த படமும் ஒரு குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி தான் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது முன்பு ரீலீஸ் ஆன இரண்டு பாடல்களை தொடர்ந்து, தற்போது தட்டான் தட்டான் என இன்னொரு பாடல் ஒன்று ரீலீஸ் ஆகி விட்டது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். “உள்ளுக்குள்ள இருக்குற உசுர உருவி எடுக்குது” என கேட்ட எல்லோரும் கூறி வருகிறார்கள்.

Views: - 74

10

0