கமலுடன் நடிக்க மறுத்த 80களின் கனவுக்கன்னி… மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகையின் மகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2023, 1:00 pm

கமலுடன் நடிக்க மறுத்த 80களின் கனவுக்கன்னி… மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகையின் மகள்!!

சினிமாவில் கொடிக்கட்டி பறந்த பிரபலங்கள் பின்னர் எந்த தகவலும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் பெற்றோர்களும் இல்லாமல், குடும்பமும் இல்லாமல் தன்னந்தனிமையில் வாழ்ந்து வருபவர் நடிகை கனகா.

தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் சினிமா மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. இவர் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை.

தந்தையுடன் சொத்து பிரச்சனை, இறந்துவிட்டதாக செய்தி என பல சர்ச்சைகளை தாண்டி தன்னந்தனிமையில் வாழ்ந்து வரும் கனகா, தற்போது படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனிடையே, கமலோடு நடிகை கனகா நடிக்காததற்கு காரணம் அவருடைய அம்மா எடுத்த முடிவுதான் என்றும், அது தன்னுடைய மகளின் இமேஜை பாதித்துவிடும் என்று அவர் நினைத்ததால் நடிக்க வைக்க வில்லையாம்.

பிறகு கனகாவுக்கு காதல் ஏற்பட்டது அவர் யாரை காதலித்தார் என்பது இன்னும் யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருக்கிறது. தற்போது வரை கனகாவின் வாழ்க்கை ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

அவர் எப்போதும் தனியாக இருப்பதையே விரும்புகிறார். காரணம் அவர் அவருடைய காதலனுக்காக இன்னமும் காத்திருக்கிறார் என்பதுதான் அதற்கு பதிலாக இருக்கும் என பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • remorse between simbu and santhanam is the main reason for drop of str 49 சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?