படுக்க வரியா வா… பட வாய்ப்பு தரேன் – இல்லன்னா போயிட்டே இரு… நடிகையிடம் தரம்கெட்டு நடந்துக்கொண்ட இயக்குனர்!

Author: Shree
1 October 2023, 6:11 pm

சினிமா துறையை பொறுத்தவரை முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள். அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகளால் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது.

இது டாப் நடிகைகள் முதல் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் வரை எல்லோரும் நடக்கிறது. இந்த பிரச்சனைகளை எதிர்கொண்ட பல நடிகைகள் இதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர். அப்படி பேசிய நடிகைகளுக்கு படவாய்ப்புகள் கிடைக்காமல் பீல்டு அவுட் ஆனது தான் மிச்சம். இங்கு அப்படித்தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அதாவது, பிரபல பாலிவுட் நடிகையான ஈஷா குப்தா தனக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை குறித்து பேசியுள்ளார். ஈஷா குப்தா பாலிவுட்டில் ஜன்னத் 2 என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து, தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறந்து விடாமல் பார்த்துக்கொள்கிறார்.

அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசியதாவது, “ சில இயக்குநர்கள் என்னிடம் ஒருமுறை அல்ல இரண்டு முறைக்கு மேல் வெளிப்படையாகவே அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். ஆனால் நான் மறுத்ததால் படப்பிடிப்பிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டேன். இதனால் படத்தில் இருந்து என்னை நீக்குவது மட்டும் அல்லாமல் என்னைப் பற்றி பொய்யான கதைகள் பரப்பப்பட்டது. இதனால் என்னால் வேறு எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

மேலும், இரண்டு பேர் என்னிடம் வந்து படத்திற்கு பேசி ஒப்பந்தம் செய்துவிட்டு பாதி படப்பிடிப்பு முடிந்த பிறகு அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டார்கள் நான் மறுத்ததால் அந்தப் படம் தொடர்பாக என்னைப் பார்க்க வேண்டாம் என முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டார்கள். எதற்கும் தயாராக இல்லை என்றால் வாய்ப்பு கொடுத்து என்ன பயன் என என்னிடமே கேட்கிறார்கள்? அது மிகவும் வேதனையாக உள்ளது. சிலர் என்னை நடிக்க வைக்கவே தயாராக இல்லை . ஷூட்டிங் நடக்குற இடத்தில் சும்மா அந்த விஷயத்துக்காக வந்து காசு வாங்கிட்டு போனால் போதும் என்ற அளவிற்கு கீழ்த்தரமான புத்தி கொண்டிருக்கிறார்கள் என கூறி வருத்தப்பட்டார் நடிகை ஈஷா குப்தா.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!