பிரபுதேவாவுக்கு திருமணம் நடந்தது உண்மை – ராஜூ சுந்தரம் போட்டுடைத்த உண்மை !

22 November 2020, 12:00 pm
Quick Share

நடனம், நடிப்பு, இயக்கம் என பிரபு தேவா பிஸியாக இருந்தாலும் இவருக்கு இந்த வேலை எல்லாம் ஜுஜுபி மேட்டர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயந்தாராவிடம் காதலில் லயித்திருந்தார் பிரபுதேவா. ஏற்கனவே காதல் தோல்வியால் நொந்து போயிருந்த நயன், பிரபுதேவாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகிவிடலாம் என்று கணக்கு போட்டார்.

இதற்காக கணக்கில்லாமல் பிரபுதேவாவுக்காக பல கோடிகளை இழந்தார். சினிமாவுக்கே முழுக்கு போட்டுவிடலாம் என்று எண்ணியிருந்தார் நயன்தாரா. கண்ணீர்மல்க சினிமாவுக்கு பிரியாவிடையெல்லாம் கொடுத்தார்.

ஆனால் கடைசியில் பிரபுதேவா புத்தியை காட்டிவிட்டார். பிறகு, பணம் போச்சே, வாழ்க்கை போச்சே என்று புலம்பிய நடிகை தற்போது வேறு ஒருவரை செட் செய்து காதலில் லயித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் திடீரென பிரபுதேவாவுக்கு இரண்டாவது முறையாக ரகசிய திருமணம் நடந்துள்ளது என்று செய்திகள் பரவ, பிரபுதேவாவின் சகோதரரும் நடன இயக்குனருமான ராஜசுந்தரம் பிரபுதேவாவுக்கு திருமணம் நடந்தது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். பிரபுதேவாவுக்கும் டாக்டர் ஹிமானி என்பவருக்கும் கடந்த மே மாதம் சென்னையில் திருமணம் நடந்ததாகவும் இருவரும் தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் வசித்து வருவதாகவும் ராஜசுந்தரம் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுக்கு டாக்டர் ஹிமானி பிசியோதெரபி செய்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

Views: - 0

0

0