The Family Man: போச்சா…இப்போ இவரும் வெப் சீரிஸ் பக்கம் வந்துட்டாரா?

20 December 2020, 11:00 am
Quick Share


மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி நடிகை ஷாகித் கபூருடன் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


ரஜினிகாந்த், கமல் ஹாசன் வரிசையில் வருடத்திற்கு அதிக படங்களில் நடித்து வெளியிடும் நடிகர்களின் பட்டியலில் தற்போது விஜய் சேதுபதி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில், பேட்ட, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், மார்கோனி மதை, சைரா நரசிம்ம ரெட்டி, சங்கத்தமிழன் என்று வரிசையாக 6 படங்கள் வெளியானது.


இந்த 2020 ஆம் ஆண்டில், விஜய் சேதுபதி நடிப்பில் ஓ மை கடவுளே, க/பெ. ரணசிங்கம் ஆகிய இரு படங்கள் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், மற்ற படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர், உப்பெனா, கடைசி விவசாயி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, நவரசா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், அண்ணபெல்லே சுப்ரமணியம், 19 (1)(a) என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், தற்போது முதல் முறையாக வெப் சீரிஸ் பக்கமும் தனது கவனத்தை திருப்பியுள்ளார். ஆம், ஷாகித் கபூர் உடன் இணைந்து தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே இயக்கத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத வெப் சீரிஸில் நடிக்க இருக்கின்ரனர். தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸ் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி வந்த தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸின் முதல் சீசனில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் மற்றும் பிரியாமணி ஐயர் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ்க்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தி பேமிலி மேன் என்ற வெப் தொடரின் 2 ஆம் பாகம் உருவாகியுள்ளது. இதில், மனோஜ் பாஜ்பாய் உடன் இணைந்து நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்த தொடர் வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது.


இந்த நிலையில், தி பேமிலி மேன் இயக்குநர் உடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் ஆகிய இருவரும் முதல் முறையாக வெப் சீரிஸில் நடிக்க இருக்கின்றனர். வரும் ஜனவரி மாதம் மும்பை மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கஸாண்ட்ரா இருவரும் இணைந்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் குறுந்தொடர் ஒன்றில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0