ஆண்ட்ரியா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் பிரபல நடன இயக்குனர்..!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2021, 12:21 pm
Andrea New Movie -Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர்கள் சினிமா இயக்குனர்களாக மாறி படங்களை இயக்கியுள்ளனர். பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோர் போக்கிரி, வில்லு, முனி, காஞ்சனா ஆகிய ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது இன்னொரு நடன இயக்குனர் சினிமா இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடன இயக்குனராக இருப்பவர் பாபி ஆண்டனி. இவர் இயக்குனராகும் படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது.

மேலும் இந்த படத்தில் ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பால சரவணன், யுவலக்‌ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர். பாபி ஆண்டனி இயக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரான் ஈதன் யோகன் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

Views: - 321

0

2