“இனிமே பொறுத்துக் கொள்ள முடியாது” – ஆரிக்கும் பாலாஜிக்கும் இடையே முற்றிய மோதல்!

1 January 2021, 4:30 pm
Quick Share

பிக் பாஸ் சீசன் 4, 85 நாட்களை தாண்டி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க்கால் பாசத்தாலும் நெகிழ்ச்சியாலும் நிரம்பி போயிருந்தார்கள் போட்டியாளர்கள். இதனிடையே இன்றைய ப்ரோமோ, அதெல்லாம் முடிந்து மீண்டும் சண்டை பாதைக்கே போட்டியாளர்கள் திரும்பியுள்ளனர் என்பதை உணர்த்துகிறது.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சிறந்த மற்றும் மோசமான போட்டியாளரை நாமினேட் செய்யப்படுவது வழக்கம். அதுபோல இன்று ஆரி மோசமான போட்டியாளராக பாலாஜியை தேர்வு செய்தார். அப்போது பாலாஜி கேப்டனாக இருந்தபோது செய்தவற்றை குறிப்பிட்டு கூற முற்படும் போது, குறுக்கிட்ட பாலாஜி, “இந்த வார விஷயத்தை மட்டும் பேசுங்க.. போன வாரம் நான் கேப்டனாக ஆக இருந்தபோது செய்த காரியத்தை இப்போ இழுக்கிறதுல என்ன அவசியம் இருக்கு”? என்று வாதிட்டார். இதனால் கடுப்பான ஆரி “நான் என்ன பேச வேண்டும் என்பதை நீ சொல்லத் தேவையில்லை” என்றார். மேலும் “நீ வேணும்னாலும் வந்து பேசு டா” என்று கூறியவுடன் சடாரென எழுந்த பாலாஜி” நீங்க ஒரு மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க, இதுவரைக்கும் பொறுத்துக்கிட்டு இருந்தேன். இனிமேலும் பொறுக்க முடியாது, வந்து பேசுடானா என்ன அர்த்தம்?” எனக்கேட்க மோதல் முற்றி கொண்டது

இரண்டு நாட்களுக்கு முன்பு ஃப்ரீஸ் டாஸ்கில் பாலாஜியை ஆரி கொஞ்சுவது போல் செய்து இருந்தார்கள். அப்போது ரம்யா பாண்டியன்” கொஞ்சாதிங்க இது நல்லா இல்ல. சண்டை போடுங்க சண்டை போடுங்க”என்று சொல்லிக்கொண்டிருந்தார். அது இன்று நடந்துவிட்டது. இப்போது சந்தோசமா ரம்யா?

Views: - 33

0

0