பாம்பை பிடித்து விளையாடியதால், சிம்பு படத்துக்கு வந்த வம்பு !

4 November 2020, 1:30 pm
Quick Share

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கையில் ஒரு பாம்பை அசால்ட் ஆக பிடித்து செம்ம ஃபிட் ஆக போஸ் கொடுத்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட நிலையில், இப்போ சிக்கல் ஆகியுள்ளது.

என்ன விஷயம் என்றால், ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் நிஜ பாம்பை மரத்திலிருந்து பிடித்து சாக்குப் பையில் போடுவது போன்ற ஒரு காட்சி உள்ளதால் தற்போது சிக்கல் உருவாகியுள்ளது.

வன உயிரினப் பாதுக்காப்புச் சட்டத்தின் கீழ் பாதுக்காக்க வேண்டிய உயிரினங்களில் இந்தியாவில் உள்ள அனைத்துப் பாம்புகளும் உள்ளது. சிம்பு இப்படி பாம்பை எல்லாம் சித்திரவதை செய்வதால் சிம்பு மீது வன உயிரின ஆர்வலர்கள் புகாரளிக்கவுள்ளனர்.

Views: - 23

0

0