இந்த கொரோனா காலகட்டத்தில் சத்தமில்லாமல் நடிகர் அஜித் செய்த உதவி – ரசிகர்கள் பெருமிதம் !

9 May 2021, 10:14 am
Quick Share

தமிழ் சினிமாவில் அல்டிமேட்
ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு கார், பைக் ரேஸ், ஏரோ மாடலிங் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம். ஏரோ மாடலிங் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் குழு ஆன தக்ஷா உலகத்திலேயே இரண்டாமிடத்தை தட்டிச்சென்றது.

இந்நிலையில் இந்த கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அஜித் ஆலோசனையின் பேரில் தக்‌ஷா குழு உருவாக்கிய ட்ரோன் ஒன்று திருநெல்வேலி மாவட்டம் முழுவதையும் சானிடைசரால் சுத்த படுத்தப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ அஜித் ரசிகர்கள் பெருமிதம் கொண்டுள்ளார்கள்.

ஏற்கனவே கொரோனா முதல் அலையின் போது அதை கட்டுபடுத்த ட்ரோன் மூலம் கிருமி நாசினி அழிக்கும் குழுவுக்கும், அந்த குழுவை வழிநடத்தும் நடிகர் அஜித்குமாருக்கும், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் பாராட்டு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 187

7

0