ஜனவரி 29ஆம் தேதி அமேசான் பிரைம் இல் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம்
27 January 2021, 12:02 pmகடந்த ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்த மாஸ்டர் திரைப்படம், கொரோனா காரணமாக இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. கிட்டத்தட்ட 10 மாதங்கள் தியேட்டருக்கு செல்ல முடியாமல் தவித்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் திருவிழா போல அமைந்தது. 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று திரைப்படத்தை பார்த்து கொண்டாடினர் மக்கள். ஏற்கனவே ஓடிடியில் வெளியாகுமா தியேட்டரில் வெளியாகுமா என்ற குழப்பத்தில் இருந்த இந்த திரைப்படம், இரண்டிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் படம் வெளியாகி 12 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் இந்தப் படத்தை வாங்கி இருப்பதாகவும், ஜனவரி 29-ஆம் தேதி இந்த படம் அமேசான் பிரைம் இல் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமேசான் பிரைம் இந்தியாவின் கண்டென்ட் தலைமை மற்றும் இயக்குனர் விஜய் சுப்பிரமணியன் கூறியது, “இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான மாஸ்டர் திரைப்படத்தை இந்தியா மற்றும் 240 நாடுகளில் உள்ள பிரைம் உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெருமை கொள்கிறோம்” என்று கூறினார்.
இன்னும் திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது மாஸ்டர் திரைப்படம். அமேசான் பிரைமின் இந்த முடிவால் ஒருசிலர் அதிருப்தியை தெரிவித்திருக்கின்றனர் ஒரு சிலர் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
0
0