விஜய் டிவி சீரியல் நடிகை சௌந்தர்யாவை படுக்கைக்கு அழைத்த நபர் – வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் !

15 May 2021, 3:00 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் நமக்கு அறிமுகம் ஆனவர்தான் சௌந்தர்யா. அதன் பிறகு பகல்நிலவு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு சில பேட்டிகளில் சீரியல் இருந்து அவராக விலகவில்லை விஜய் டிவியில் இருந்து விலக்கப்பட்டார் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான காரணத்தை விஜய் டிவி சரியாக கூறவில்லை என்றும் வருத்தத்தோடு கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சௌந்தர்யாவிடம் ஒரு கல்லூரி ஆசிரியர் இவரை படுக்கைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் அதில் அவர் ஆபாசமாகவும் வர்ணித்து உள்ளார்.

இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ள நடிகை செளந்தர்யா, அந்த நபரை பிளாக் செய்து விட்டதாகவும், இவருடன் படிக்கும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 289

9

4