ரவியால் வந்த பிரச்சனை.. கெனிஷா எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan26 May 2025, 11:41 am
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதனிடையே திருமண நிகழ்வு ஒன்றில் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் வலம் வந்தது சர்ச்சையானது. இருவரும் கைக்கோர்த்தபடி வந்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படியுங்க: ஷங்கருடன் பணியாற்றியது மோசமான அனுபவம்- ஆதங்கத்தை கொட்டிய கேம் சேஞ்சர் எடிட்டர்!
ரவி மோகன் குறித்து ஆர்த்தி பரபரப்பு அறிக்கை வெளியிட, பதிலுக்கு ரவி மோகனும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனிடையே இருவரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்தநிலையில் பாடகி கெனிஷா, தன்னை பற்றி அவதூறாக பேசியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பாலியல் மிரட்டல், ஆபாச அர்ச்சனைகள், கொலை மிரட்டல் விடுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறாக கருத்துகளை அனுமதிக்க கூடாது, அவ்வாறு மிரட்டல் விடுத்தவர்களின் விபரங்கள் சேகரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.