திடீரென்று குஷ்புவுக்கு வந்த கற்பழிப்பு மிரட்டல் – நடிகை குஷ்பு வெளியிட்ட ஆதாரம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

6 August 2020, 3:26 pm
Quick Share

தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதம்பி என படங்கள் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் குஷ்பு. தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனக்கு குறிப்பிட்ட ஒரு ஃபோன் நம்பரில் இருந்து தொடர்ந்து கற்பழிப்பு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஃபோன் செய்பவரின் பெயர் சஞ்சய் ஷர்மா என்றும், இடம் கொல்கத்தா எனவும் காட்டுகிறது.

கொல்கத்தா போலீஸ் இந்த விஷயம் என்னவென்று விசாரிக்கவும்” என அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த குறிப்பிட்ட ஃபோன் நம்பரையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.