பழைய கோபத்தை மனசுல வச்சிக்கிட்டு? ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு சிம்பு வராததுக்கு காரணம்?

Author: Prasad
14 May 2025, 6:20 pm

சிம்பு-ஐசரி கணேஷ் விவகாரம்

ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனத்திற்கு சிம்பு நடித்துக்கொடுத்த திரைப்படம்தான் “வெந்து தணிந்தது காடு”. சிம்பு ஐசரி கணேஷிற்காக மூன்று திரைப்படங்களில் நடித்துக்கொடுப்பதாக ஒப்பந்தமானார். அதன் படி “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வந்தார். 

ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டார். இதனை தொடர்ந்து சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தில் ஒப்பந்தமானார். “கொரோனா குமார்” திரைப்படத்திற்கு சிம்பு 4 கோடி ரூபாய் முன்பணமாக பெற்றிருந்ததாக ஐசரி கணேஷ் கூறினார். மேலும் “முன்பணம் வாங்கிக்கொண்டு எனது திரைப்படத்தில் நடித்துக்கொடுக்காமல் சிம்பு தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்கிறார். அவருக்கு ரெட் கார்ட் அளிக்கவேண்டும்” என ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. 

the reason behind simbu not attending ishari ganesh daughter marriage function

எனினும் இது குறித்து பின்னாளில் ஒரு பேட்டியில் பேசிய ஐசரி கணேஷ், “சிம்புவை தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று சொல்லவில்லை. எனது திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு தக் லைஃப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறினேன். அவரும் விரைவில் நடித்துக்கொடுப்பதாக கூறியுள்ளார். இது அண்ணன்-தம்பிக்குள் நடக்கும் பிரச்சனைதான். சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும்” என கூறினார். 

திருமணத்திற்கு வராத சிம்பு

கடந்த மே 9 ஆம் தேதி ஐசரி கணேஷின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் சிம்பு இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. 

the reason behind simbu not attending ishari ganesh daughter marriage function

இந்த நிலையில் சிம்பு ஐசரி கணேஷ் மகளின் திருமணத்தில் கலந்துகொள்ளாததன் காரணம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஐசரி கணேஷ் தனது மகளின் திருமணத்திற்காக திருமண அழைப்பிதழை சிம்பு வீட்டிற்கு அளிக்க சென்றபோது சிம்பு வீட்டில் இல்லையாம். 

எனினும் ஐசரி கணேஷ் தனக்கு தனிப்பட்ட முறையில் ஃபோனில் அழைத்து “கல்யாணத்துக்கு வந்துடுங்க தம்பி” என்று கூப்பிடுவார் என சிம்பு நினைத்தாராம். ஆனால் கடைசி வரை அவர் ஃபோன் செய்யவே இல்லையாம். இதனால்தான் சிம்பு ஐசரி கணேஷ் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தகவல் வருகிறது. 

  • pradeep ranganathan dude title have trouble பிரதீப் ரங்கநாதன் பட தலைப்புக்கு வந்த சிக்கல்? ஸ்டார்ட்டிங்லயே End Card போட்டாங்களே?
  • Leave a Reply