எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. எலும்பும் தோலுமாக THE ROCK… என்னாச்சு இவருக்கு?
Author: Udayachandran RadhaKrishnan3 September 2025, 11:49 am
90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான மல்யுத்த வீரர் என்றால் உடனே நினைவுக்கு வருவது தி ராக் என அழைக்கப்ழுடும் டுவைன் ஜான்சன்.
WWE மல்யுத்த போட்டியில் இவரின் சண்டையை காண உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. திடீரென மல்யுத்தத்திற்கு பிரேக் பேட்ட ராக், பின்னர் திரைத்துறையில் நுழைந்தார்.
2001ஆம் ஆண்டில் தி ஸ்கார்ப்பியன் கிங் என்ற படத்தில் நடிகராக நுழைந்த அவர், தொடர்ந்து படத்தில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தி ஸ்மேஷிங் மெஷின் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 3 ஆம் தேதி வெளியாகிறது.
இதனிடைய வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தி ராக் பங்கேற்றது பலரையும் ஷாக் ஆக வைத்தது காரணம். உடல் மெலிந்து அவர் காணப்பட்டதால் ரசிகர்கள் பதறினர்.

கட்டுமஸ்தான உடம்போடு தோற்றமளித்த தி ராக், உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்பட்டதால் அவருக்கு என்னாச்சு என முணுமுணுக்க ஆரம்பித்தனர். பின்னர் தான் அது தனது படத்துக்காக உடல் எடையை குறைத்தாக தி ராக் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது.
