படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு நடிக்க முடியாது.. படத்தில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார்!
Author: Udayachandran RadhaKrishnan3 May 2025, 12:04 pm
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவர் அண்மையில் நடித்த படங்கள் தொடர்ச்சியாக ரூ.1000 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது.
இதையும் படியுங்க: நீ நடிகனாக இருக்கவே லாயக்கி இல்ல.. யோகி பாபுவை மேடையில் விட்டு விளாசிய இயக்குநர்!
தொடர்ச்சியாக கிங் என்ற படத்தில் நடித்து வரும் ஷாருக்கான், தனது ஆஸ்தான நண்பரும், இயக்குநருமான கரண் ஜோகர் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார்.
அதில் கரண் ஜோகர் சொன்ன கதையை கேட்டு தான் ஆடிப்போனதாகவும், அந்த கதைப்படி நான் பாவாடை கட்டியே வரவேண்டும் என்பதால் அந்த படத்தில் இருந்து விலகியதாகவும் கூறியுள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரண் ஜோகர் இயக்கத்தில் ஷாருக்கான் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் கரண் ஜோகர், ஷாருக்கானுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார்.