AAA படத்தால் ஈஸ்வரன் வெளியீட்டில் பிரச்சினை இல்லை- சொன்ன தேதியில் வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

31 December 2020, 8:01 pm
Quick Share

கொரோனா கால கட்டத்திற்கு பின் திரையரங்குகள் திறந்தாலும் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்ற விதியை பெரும்பாலும் இந்த படங்கள் வெளிவராமல் இருந்தது. இருந்தாலும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. இதனால் குஷியில் இருந்த மக்களுக்கு சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிப்பு இரட்டை சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்நிலையில் மூன்று வருடங்களுக்கு முன் சிம்பு நடிப்பில் வெளிவந்த AAA திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இதனை அடிப்படையாக கொண்டு தற்போது வெளியாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தை வெளியிடக் கூடாது என சிலர் கூறி வருவதால் தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் “கொரோனா காலத்தில் திரையரங்கிற்கு வர மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் இதையும் தாண்டி படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதை நாம் வரவேற்க வேண்டும். ஆனால் மாறாக சிலர் AAA படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு இவ்வளவு கோடி காட்டினால் தான் வெளியிடப்படும் என்று சொல்வது எந்த வகையிலும் நியாயமில்லை. AAA திரைப்படத்திற்கும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஏற்கனவே சிம்பு அந்த படத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். நிறைய முறை பேசி விட்டாலும் இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்படவில்லை. சங்கம் மூலமாவும் பேசியும் கட்டப்பஞ்சாயத்து செய்தும் இந்த பிரச்சனை தீரவில்லை. எனவே சிம்பு நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கு மேல் எங்களிடம் கட்ட பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கச் சொல்வது நியாயமில்லை. ஈஸ்வரன் படம் ஏற்கனவே அறிவித்தபடி திரையரங்கில் வெளியாகும்” என தெரிவித்துள்ளனர்

Views: - 46

0

0