ரஜினிக்கு ஹீரோயின்… எனக்கு மட்டும் மகளா? சரத்குமார் காட்டம்!

Author:
1 August 2024, 11:09 am

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக நட்சத்திர அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகர் சரத்குமார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த நட்புக்காக, சூரிய வம்சம், நாட்டாமை, கம்பீரம், காஞ்சனா, ஐயா, பச்சை கிளி முத்துச்சரம் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றது .

அந்த காலத்தில் பிரபலமான நடிகராக இருந்து வந்த சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜக்குபாய். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரும் தோல்வி அடைந்து மோசமான நஷ்டத்தை சந்தித்தது .

இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் படத்தின் தோல்வி குறித்து கேட்டதற்கு அதற்கு பதில் அளித்த சரத்குமார்… ஜக்குபாய் படம் வெளியான சமயத்தில் தான் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ரஜினியின் சிவாஜி படம் வெளிவந்தது.

அந்த நேரத்தில் ரஜினியுடன் ஸ்ரேயா சரண் அவருக்கு ஜோடியாக கவர்ச்சியாக ஆட்டம் போட்டு நடித்துவிட்டு உடனடியாக ஜக்குபாய் திரைப்படத்தில் எனக்கு மகளாக நடித்தால் ரசிகர்கள் எப்படி அதை பார்ப்பார்கள்? எப்படி அதை ஏற்றுக் கொள்வார்கள்? அதுதான் அந்த தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்துவிட்டது.

இந்த படத்தை நான் ஆரம்பத்திலேயே தவிர்த்துவிட்டு மீண்டும் நாட்டாமை , நட்புக்காக போன்ற வில்லேஜ் சப்ஜெக்ட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்திருந்தால் என்னுடைய கெரியர் நன்றாக போயிருக்கும் என சரத்குமார் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!