கெட்டவரிடம் கூட நல்லதை தேடும் சிறந்த மனிதர்…. இளையராஜா குறித்து பெருமையாக பேசிய ஏ.ஆர் ரஹ்மான் (வீடியோ)

Author: Shree
28 June 2023, 12:34 pm

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

ilayaraja-updatenews360

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.

வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார். அவ்வளவு ஏன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு அவர் எங்க வளர்ந்திடுவாரோ என்ற ஒரு வித பயத்தில் அவரது வளர்ச்சியை பலகோணங்களில் தடுத்து நிறுத்தியிருக்கிறார். மணிரத்தினம் – ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி சேர்ந்ததால் இளையராஜா அவர்கள் இருவருடனும் பேசிக்கொள்வதில்லை என அரசல் புரசலாக செய்திகள் வெளியானது.

AR Rahman

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் ஏஆர் ரஹ்மான் இளையராஜா குறித்து பேட்டி ஒன்றில் பெருமையாக பேசியுள்ளார். அதாவது, நான் மற்ற எந்த இசையமைப்பாளரிடமும் பார்க்காத ஒரு விஷயத்தை இளையராஜாவிடம் பார்த்து வியந்து அதை கற்றுக்கொண்டேன். ” அது என்னவென்றால் ஒரு இசைக்கலைஞன் என்றால் தண்ணி அடிப்பான், தம் அடிப்பான், பெண்களோடு சேர்ந்து சுற்றுவான் இப்போ இருக்குற ஜெனெரேஷன்ல சில பேர் அப்படித்தான் இருக்காங்க.

ஆனால் இளையராஜா இசையை தெய்வமாக மதிப்பவர். அவர் கிட்டத்தட்ட ஒரு சாமியார் போலவே இருப்பார். தண்ணி அடிக்க மாட்டாரு, தம் அடிக்கமாட்டாரு, தேவையின்றி யாரிடமும் பேசமாட்டார் இந்த விஷயமெல்லாம் நான் அவரை பார்த்து கற்றுக்கொண்டேன் என பெருமையாக பேசினார். என்னதான் இளையராஜா பல மேடையில்ஏஆர் ரஹ்மானை அவமத்திருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறந்த மனிதாக பேசியிருப்பது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!