2 மாசம் தான் கால்ஷீட்டா? விஜய்யின் தளபதி 65 ஷூட்டிங் எப்போது?

3 February 2021, 11:21 pm
Quick Share

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு குறித்தும், அவரது கால்ஷீட் குறித்தும் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி வெளியான படம் மாஸ்டர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு திரைக்கு வந்த மாஸ்டர் படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாஸ்டர் தாறுமாறாக ஹிட் கொடுத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியானதைத் தொடர்ந்து ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியானது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. எனினும், மாஸ்டர் படம் கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், தளபதி65 படத்தில் நடிக்கிறார்.
பொதுவாக ஒரு படம் திரைக்கு வந்து ஒரு மாதம் ஆன பிறகு விஜய் தனது அடுத்த படத்தை தொடங்குவார். ஆனால், மாஸ்டர் படம் வெளியாகி 3 மாதத்திற்குப் பிறகு தளபதி 65 படத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி65 படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பூவையாரும் விஜய்யுடன் இணைந்து 3ஆவது முறையாக நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்தி வெளியானது. இந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்தும், விஜய்யின் கால்ஷீட் குறித்தும் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தப் படத்திற்கு விஜய் 2 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்து இந்த ஆண்டே படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தற்போது புதிதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து தயாரிப்பு தரப்பிடமிருந்து விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 3

0

0