பழிக்கு பழி… லிப்லாக் காட்சியில் நடித்து 20 வருட பகை தீர்த்துக்கொண்ட கஜோல்!

Author: Shree
20 July 2023, 2:51 pm

மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் கஜோல் நடித்துள்ள The Trial என்ற ஹிந்தி தொடரில் கஜோல் இரண்டு நபர்களுக்கு லிப்லாக் கொடுத்து நடித்திருப்பார். கஜோல் திரைப்படத்தில் முத்தக்காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் 20 வருடமாக கடைபிடித்து வந்த கண்ணியத்தை 48 வயதில் மீறியது ஏன் என்ற கேள்வியை பலரும் எழுப்பியிருந்தார்கள்.

இதற்கான உண்மை காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது காஜலின் கணவர் அஜய் தேவ்கான் நடிகைகள் தபு, ரகுல் ப்ரீத் சிங், எரிகா கர் ஆகியோருக்கு லிப் லாக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த லிப் லாக் காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக கஜோல் – அலி கான் உடன் சில முறை ஒத்திகை பார்த்து அதன் பின்னர் நடித்ததாக செய்திகள் கூறுகிறது. எனவே அந்த வெறுப்புகளை மனதில் கொண்டு தான் இப்படி லிப்லாக் காட்சிகளில் நடித்து பகையை தீர்த்துக்கொண்டாராம் கஜோல்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?