பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்.. 50வது எபிசோடில் டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan30 November 2024, 7:31 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அக்டோபா 6ஆம் தேதி ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தற்போது 50வது நாளை எடடியுள்ளது. நிகழ்ச்சயை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி கட் அண்ட் ரைட்டாக போட்டியாளர்களை விளாசி வருவது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இதையும் படியுங்க: மோசடி புகாரில் சிக்கிய நடிகை..சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை..!
இந்த நிலையில் 50வது எபிசோடான இன்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ணவ் மீண்டும் வருவார் என கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதுவரை நடப்பு சீசனில் இருந்து அர்னவ், ரவீந்தர், சுனிதா, தர்ஷா குப்தா, வர்ஷினி ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று வைல்ட் கார்டு மூலம் உள்ளே நுழைந்த ஷிவக்குமார் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,