தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…

Author: Prasad
9 May 2025, 1:26 pm

ஆபரேஷன் சிந்தூர்

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் பயங்கரவாதிகளின் 9 முகாம்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்தொழித்தது. அதனை தொடர்ந்து போர் சூழல் தீவிரமடைய இரு நாட்டு எல்லைகளிலும் போர் மேகம் சூழ்ந்துள்ளது. காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் போன்ற எல்லை மாநிலங்களில் போர் பதற்றம் தீவிரமாக இருக்கும் நிலையில் போர் இன்னும் தீவிரமடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

thug life audio launch date postponed because of war

தக் லைஃப்

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடித்துள்ள “தக் லைஃப்” திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன். அதில், “தற்போதைய எச்சரிக்கை நிலையை கருத்தில் கொண்டு வருகிற 16 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் தேதியை மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளோம். 

அசைக்க முடியாத துணிவுடன் நாட்டின் எல்லையில் நமது வீரர்களின் தியாகத்திற்கு முன்னால் இது கொண்டாடப்பட வேண்டிய தருணம் அல்ல. அமைதியான ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என நாங்கள் நம்புகிறோம். புதிய தேதியை விரைவில் அறிவிக்கிறோம்” என்று கூறியுள்ளார். 

“தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோருடன் திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, சான்யா மல்ஹோத்ரா, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!