ஒரு பெரிய டைரக்டர் பண்ற வேலையா இது? பிரபல நாவலை அப்படியே காப்பி அடித்த மணிரத்னம்? சிக்கலில் தக் லைஃப்…

Author: Prasad
11 June 2025, 7:28 pm

சுமாரான வரவேற்பு பெற்ற தக் லைஃப்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த “தக் லைஃப்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி 38 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளதால் இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால் “மணிரத்னம்  மிகவும் மோசமான ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார்” என ரசிகர்கள் பலரும் விமர்சித்தனர். அதே போல் இத்திரைப்படத்தின் திரைக்கதை மிகவும் சலித்துப்போன திரைக்கதையாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 

thug life movie copied from famous novel

இத்திரைப்படத்தின் கதையை மணிரத்னம்-கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள நிலையில் தற்போது இத்திரைப்படம் காப்பியடிக்கப்பட்ட திரைப்படம் என்று ஒரு பிராது எழுந்துள்ளது.

நாவலை அப்பட்டமாக காப்பியடித்த மணிரத்னம்

அதாவது என்.கணேசன் என்ற பிரபல எழுத்தாளர் எழுதிய “அமானுஷ்யன்” என்ற நாவலில் இடம்பெற்ற சம்பவங்கள் “தக் லைஃப்” திரைப்படத்தில் பல இடங்களில் அப்படியே படமாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் இந்நாவலில் இடம்பெற்ற வசனங்களை படத்தில் காட்சிகளாக மாற்றியுள்ளார்களாம். இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இத்தகவல் இணையத்தில் பரவலாக பரவி வரும் நிலையில் “அமானுஷ்யன்” நாவலை படித்த பலரும் “எங்களுக்கும் இந்த சந்தேகம் எழுந்தது” என கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்விஷயம் இன்னும் சில நாட்களில் பூதாகரமாக வெடிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. 

  • mysskin asks 5 lakhs for speech in cinema functions 5 லட்சம் இல்லைனா எனக்கு ஃபோன் பண்ணாதீங்க- மேடையில் புது கண்டிஷன் போட்ட மிஷ்கின்?  
  • Leave a Reply