கமல் VS சிம்பு? யார் ஜெயிக்கிறானு பார்த்துடலாமா? – தக் லைஃப் டிரெயிலரால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Author: Prasad17 May 2025, 5:31 pm
வெளியானது டிரைலர்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசன்,சிம்பு ஆகியோருடன் திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், சான்யா மல்ஹோத்ரா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராஜ் கமல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் வெளிவந்துள்ளது.
கமல் VS சிம்பு?
இத்திரைப்படத்தின் டிரெயிலரை பார்க்கையில், கேங்க்ஸ்டராக இருக்கும் கமல்ஹாசனின் அரவணைப்பில் வளர்கின்ற சிம்பு, இறுதியில் கமல்ஹாசனின் இடத்தை பிடிக்க முயற்சிக்க இருவருக்கும் இடையே மோதல் துவங்குகிறது, இந்த மோதலில் இறுதியில் யார் வென்றார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாக இருக்கும் என்று வியூகிக்கப்படுகிறது.
டிரெயிலரில் கமல்ஹாசனும் சிம்புவும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சித் துணுக்குகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் இத்திரைப்படத்தில் இருவருக்கும் இடையே மிகப் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் பல அமைந்துள்ளதாக தெரிய வருகிறது. இது கமல் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியான நிலையில் பலரும் இதனை வைரல் ஆக்கி வருகின்றனர்.