மணிரத்னத்துக்கு டஃப் கொடுக்கும் கமல்,சிம்பு; தக் லைஃப் அப்டேட்,..

Author: Sudha
6 July 2024, 4:29 pm

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் திரைப்படம், ‘தக் லைஃப்’

இந்த படத்தை ஹாலிவுட் படமான ‘ரைஸ் ஆஃப் ஸ்கைவால்கர்’ உடன் ஒப்பிடும் ஒரு சமூக ஊடக மீம் வைரலாகி வருகிறது.

கமல் கதாபாத்திரத்தின் பெயர், ரங்கராய சக்திவேல் நாயக்கர், நாயகன் படத்தின் சக்திவேல் நாயக்கர் என்ற கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சியாக இருக்குமோ என திரை வட்டாரம் பேசிக் கொள்கிறது. சிலம்பரசன் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில், நடித்துள்ளார். நாயகன் படத்துக்கு பிறகு கமலுடன் மணிரத்னம் இணையும் 2 வயது திரைப்படம் தக் லைஃப். அதைப் போலவே செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் சிலம்பரசன் இணையும் 2 வது திரைப்படம் இது.

மணிரத்னம் தன்னுடைய திரைப்படங்களின் ஷூட்டிங்கை 50 நாட்களுக்குள் முடித்து விடுவார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2 பாகங்களையும் கூட அவர் 50 நாட்களுக்குள் முடித்து விட்டாராம். ஆனால் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் 100 நாள் நடைபெறும் என திரைப்படக் குழு சொல்கிறது. இதன் மூலம் “தக் லைஃப்”இயக்குனர் மணிரத்னத்தின் திரைப்பட வரலாற்றில் முக்கிய படம் என்பது தெரிகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!