நீதிமன்றத் தடையையும் மீறி வெளியான “தக் லைஃப்”… அதிர்ச்சியில் படக்குழுவினர்!

Author: Prasad
5 June 2025, 7:30 pm

கலவையான விமர்சனம் 

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்த “தக் லைஃப்” திரைப்படம் இன்று வெளியானது. மணிரத்னம்-கமல்ஹாசன் காம்போவில் “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 38 வருடங்களுக்குப் பிறகு இத்திரைப்படம் வெளிவந்துள்ளதால் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இத்திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. 

படம் முழுவதும் திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்வதாகவும், கதையில் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை எனவும் படம் பார்த்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படம் நீதிமன்றத் தடையையும் மீறி இணையத்தில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

thug life released in piracy website

பைரசி இணையத்தளம்

“தக் லைஃப்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இயங்கி வரும் 793 இணையத்தளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிடுவதை தடை செய்ய ராஜ்கமல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இத்திரைப்படத்தை சட்டவிரோதமாக 793 இணையத்தளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிட தடை விதித்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இணையத்தள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. எனினும் தற்போது “தக் லைஃப்” திரைப்படம் இணையத்தில் வெளியானது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • the reasonn behind vaadivaasal movie drop சூர்யாவுக்கு பதில் சொல்லாமல் மழுப்பிய வெற்றிமாறன்? வாடிவாசல் டிராப் ஆனதுக்கு இதான் காரணமா?
  • Leave a Reply