விஜய்யை வைத்து தயவுசெய்து படம் எடுக்காதீங்க- தயாரிப்பாளரின் காதில் ஓதிய பிரபலம்! இதான் காரணமா?
Author: Prasad17 May 2025, 8:06 pm
சூப்பர் குட் 100 ஆவது படம்
கோலிவுட்டில் பல கிளாசிக் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் “சூப்பர் குட் பிலிம்ஸ்”. இதன் உரிமையாளரான ஆர்.பி.சௌத்ரிக்கு ஒரு ஆசை இருந்தது. அதாவது தனது நிறுவனத்தின் 100 ஆவது திரைப்படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க வேண்டும் என்பதுதான் எந்த ஆசை.

இதற்காக விஜய்யுடன் பேச்சுவார்த்தைகளும் பல நடந்தன. ஆனால் அது கைக்கூடவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க திட்டமிட்ட விஜய் திரைப்படம் குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
விஜய் நமக்கு வேணாம்!

அதாவது ஆர்.பி.சௌத்ரி தனது 100 ஆவது திரைப்படத்தின் திட்டத்தை குறித்து திருப்பூர் சுப்ரமணியமிடம் கலந்தாலோசித்தாராம். அப்போது திருப்பூர் சுப்ரமணியம், “எனக்கு 73 வயதாகிவிட்டது. உங்களுக்கு 78 வயதாகிவிட்டது. நீங்கள் எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறீர்கள். இந்த சமயத்தில் நீங்கள் ஒரு பெரிய நடிகருக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இயக்குனருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து, ஒரு 300 அல்லது 350 கோடி ரூபாய் பட்ஜெட் ஆகும். இந்த ரிஸ்க் நமக்கு வேண்டாம் சார்” என ஆலோசனை கூறினாராம். இதன் பிறகு ஆர்.பி.சௌத்ரி தனது முடிவை கைவிட்டுவிட்டதாக திருப்பூர் சுப்ரமணியம் கூறுகிறார்.
