இவங்களுக்கு ஓட்டு போடுங்க.. ரஜினி பட இயக்குனர் அதிரடி பதிவு..!

Author: Vignesh
18 April 2024, 3:29 pm
rajini - updatenews360
Quick Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது “வேட்டையன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 170 வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா இயக்கவுள்ளார்.

இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் நடிக்கிறார். மேலும் பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் என பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று வெளிவந்து கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

rajini - updatenews360

இந்நிலையில், வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என இயக்குனர் ஞானவேல் வெளிப்படையாக ஒரு பதிவை போட்டு உள்ளார். வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை. வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவதையே மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை. இந்தியா கூட்டணி கட்சிகளை வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.

rajini - updatenews360

மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என ஞானவேல் பதிவிட்டு உள்ளார்.

Views: - 70

0

0