லியோ படத்தில் இணைந்த உச்ச நடிகர் : சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 1:00 pm

பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது.

இதையடுத்து விஜய்யின் 67வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இந்த கூட்டணி மாஸ் வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில் தளபதி 67வது படத்தின் கதாபாத்திரங்கள், டைட்டில் என அடுத்தடுத்து அப்டேட்டுகளை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு, ரசிகர்களை திணறடித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் நேற்று படத்தின் டைட்டில் லியோ என வெளியிடப்பட்டது.

அந்த டைட்டில் டீசர் வீடியோவும் வெளியாக பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தில் டைட்டில் டீசரில் பல ரகசியங்கள் ஒளிந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, லியோ படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் உள்ளதாக ரத்னகுமார் கூறியுள்ளார். கமல் கூட விஜய் வரும் காட்சி பயங்கரமாக இருக்கும் என கூறியுள்ளதால் ஒரு வேளை விக்ரம் உடன் லியோ கனெக்டாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஏற்கனவே விக்ரம் படத்தில் கைதி படத்தின் கனெக்ட்விட்டி இருக்கும். அப்போ இதுவும் LCU தானா என்பது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?