இந்த போட்டோல இருக்கும் கியூட் குழந்தை யார் தெரியுமா.. இப்ப இவரு ஃபேமஸ் ஆன சீரியல் நடிகர்..!

Author: Vignesh
25 March 2024, 4:59 pm

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்தவகையில், பிரபல சீரியல் நடிகரின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சீரியல் நடிகர் யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

childhood-photo

அதாவது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியலில் பிரபலமானவர் நடிகர் என்பதை தாண்டி இவர் வானொலியிலும் பணியாற்றியுள்ளார். தற்போது, ஜீ தமிழில் முக்கிய சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் மிர்ச்சி செந்தில் தான் வானொலியில் முக்கிய சோவை நடத்தி வந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமாகி அதன் பின்னர், நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியலில் நடித்து வந்தார்.

mirchi senthil

இப்போது, ஜீ தமிழில் அண்ணா என்ற சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது சிறிய வயது புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!