வேகமாக விவாகரத்து பெற்ற டாப் தொகுப்பாளினிகள்.. சினிமா வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா..!

Author: Vignesh
20 June 2023, 1:54 pm
vj -updatenews360
Quick Share

சின்னத்திரை தொலைக்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உச்சத்தில் இருந்து பல தொகுப்பாளர்கள் திருமணத்திற்கு பின்பும் அந்த வேலையை செய்து வருகின்றனர்.

ஒரு சிலர் கணவரை விவகாரத்து செய்து அந்த வேலையை பார்த்து வருகிறார்கள் அப்படி விஜேவாக இருந்து விவாகரத்து செய்த தொகுப்பாளர்கள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

VJ டிடி.

விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி மூன்று ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவகாரத்து செய்துவிட்டனர். அதன் பின்னர் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் டிடி ஆக்டிவாக இருந்து வருகிறார்,

VJ ரம்யா

vj ramya - updatenews360

விஜய் தொலைக்காட்சியில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்து விஜே ஆக களம் இறங்கிய ரம்யா கடந்த 2014 ஆம் ஆண்டு அப்ரஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமணமான ஒரே ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக 2015ல் இவர் விவகாரத்து செய்துவிட்டனர்.

VJ மகேஸ்வரி

பல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றிய விஜே மகேஸ்வரி 2005 ஆம் ஆண்டு சாணக்யா என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மகன் இருக்கும் நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 5 ஆண்டுகள் கழித்து 2010 ஆம் ஆண்டு கணவரை விவகாரத்து செய்து வாழ்ந்து வருகிறார்.

VJ பிரியங்கா

Priyanka -Updatenews360

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஸ்டாட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து மக்கள் மனதில் ஓங்கி நின்ற விஜே பிரியங்கா 2016 ம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் விஜேவாக வேலை பார்த்து வரும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கணவரை பற்றி எங்கும் வாய் திறக்கவில்லை. இதனால் பிரியங்கா கணவரை பிரிந்து வாழ்கிறார் என்று செய்திகள் அப்போதே வெளியானது.

  • Eps அரசியல் நாகரீகமே இல்லையா? அதிகார மமதையில் அராஜகம் : கேபி முனுசாமியை தடுத்த திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!
  • Views: - 495

    1

    1