படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!
Author: Prasad30 April 2025, 8:11 pm
ரசிகர்களை கவர்ந்த டீசர்
சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. இத்திரைப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இதில் சசிகுமார், சிம்ரன் ஆகியோருடன் யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் டீசர் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் டிரைலர் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தை தூண்டியது.
ஒரு இலங்கை தமிழ் குடும்பம் தமிழகத்தில் எவ்வாறு பல பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதே இத்திரைப்படத்தின் கரு ஆகும். இத்திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிக்கையாளர்களுக்காக திரையிடப்பட்டது. இதனை பார்த்த வலைப்பேச்சு குழுவினர் இத்திரைப்படத்தை குறித்து தங்களது விமர்சனங்களை கூறியுள்ளனர்.
வெற்றிக் கிடைத்ததா?
“இத்திரைப்படத்தின் கதை கொஞ்சம் சீரீயஸ் ஆன கதையாக இருந்தாலும் அவர்கள் இதனை நகைச்சுவையாகவே கூற முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறதா என்று பார்த்தால் தெரியவில்லை?” என பிஸ்மி கூற, அதற்கு அந்தணன் “வெற்றி கிடைத்திருக்கிறது ஆனால் முழு வெற்றி கிடைக்கவில்லை” என கூறினார்.
அதன் பின் பேசிய பிஸ்மி, “முதல் பாதி முழுக்க என்டெர்டெயின்மண்ட்டிற்கான விஷயமே அதில் இருக்காது. ஆனால் அதற்கான இடம் நிறைய இருந்தது” என கூறினார். அதே போல் “இத்திரைப்படத்தில் நடித்த அந்த சிறுவன் கதாபாத்திரத்தை வைத்து அழகாக நகைச்சுவை காட்சிகளை இன்னும் எழுதியிருக்கலாம்” எனவும் பிஸ்மி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.