டூப்ளிகேட் காதல்… DJ BLACK’யை மேடையில் வெளுத்து வாங்கிய TR – வைரல் வீடியோ!

Author: Shree
6 April 2023, 9:34 pm

விஜய் டிவியில் டிடி ,பிரியங்கா, மாகாபா இவர்களின் லிஸ்டில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் டிஜே பிளாக். வழக்கமாக டிஜே என்றால் வெவ்வேறு இசைக் கோர்வைகளை ஒரே ஃப்ளோவில் மாற்றி மாற்றி பிளே செய்வார்கள்.

ஆனால், டிஜே பிளாக் “DJ”என்ற விதியை மாற்றி கவுண்டர் அடிப்பது, பாடலிலே பதில் சொல்வது, கலாய்ப்பது என போட்டியாளர், நடுவர் , சிறப்புவிருந்தினர் இப்படி யாரையும் பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்குவார்.

அப்டித்தான் DJ பிளாக் – பூஜா ஜோடி சமூகவலைத்தளங்களில் படு பேமஸான ஜோடி. இந்நிலையில் சமீபத்திய எபிசோடில் சிறப்பு விருந்தினராக நடிகர் டி ராஜேந்தர் கலந்துக்கொண்டார். அப்போது வழக்கம்போல பூஜாவுக்காக பாடல்கள் போட்டார் டிஜே பிளாக்.

ஒரு கட்டத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ஒரு வசனத்தையும் எடிட் செய்து ஒலிக்கவிட்டார் பிளாக். இது எல்லை மீறி கொஞ்சம் ஓவராக இருப்பதாக டி.ராஜேந்தர் விமர்சித்து கலாய்த்தார். அதுமட்டுமல்லல்லாமல் ‘டூப்ளிகேட் காதல்’ என குறிப்பிட்டு DJ பிளாக்கையும் பூஜாவையும் வெச்சி செய்துவிட்டார்.

  • the reason behind rajinikanth not acted in papanasam movie பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த்? இயக்குனர் எடுத்த முடிவால் ஹீரோவே மாறிய சம்பவம்!