திருநங்கையுடன் தகாத உறவு! பிரபல விஜய் டிவி புகழ் நடிகர் மீது பாலியல் புகார்?
Author: Prasad8 September 2025, 4:23 pm
விஜய் டிவி புகழ்
விஜய் தொலைக்காட்சியில் “கலக்கபோவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர்தான் நாஞ்சில் விஜயன். “கலக்கப்போவது யாரு?” மட்டுமல்லாது “வள்ளி திருமணம்” போன்ற தொடர்களிலும் இவர் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற இவர் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் ரீதியாக ஏமாற்றிவிட்டார்
வைஸ்ரீஷா என்ற திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் நாஞ்சில் விஜயன் மீது புகார் அளித்துள்ளார். அப்புகாரில், தனது திருமணத்திற்கு முன்பு நாஞ்சில் விஜயன் 5 ஆண்டுகளாக தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாகவும் திருமணத்திற்கு பின் கடந்த ஆறு மாதங்களாக தனது நம்பரை பிளாக் செய்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்புகாரில் கூறியுள்ளார்.
இப்புகாரை குறித்து நாஞ்சில் விஜயனிடன் விசாரித்தபோது, தான் நட்பு ரீதியாக மட்டுமே பழகியதாக கூறியுள்ளார். இது குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. நாஞ்சில் விஜயன் ஏற்கனவே மரியம் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
