‘கைலாசா சென்றாரா கண்ணம்மா’ – வச்சு செய்யும் மீம் கிரியேட்டர்கள்!!

Author: Aarthi
2 October 2020, 1:31 pm
kanamamee-updatenews360
Quick Share

பிரபல தனியார் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. கடந்த வாரம் வீட்டை விட்டு கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் கண்ணம்மா வெளியேறியதால், விறுவிறுப்பான கதைகளத்துடன் டிஆர்பியில் முதலிடம் பிடித்தது பாரதி கண்ணம்மா.

இதில் கண்ணம்மா கையில் பையுடன் நடந்துகொண்டே இருப்பது போல் அதிக காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், மீம் கிரியேட்டர்களின் கற்பனைக்கு தீனி போட்டுள்ளது பாரதி கண்ணம்மா தொடர்.

நாள் கணக்கில் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கில் இருந்த கண்ணம்மா மீம்ஸ் தற்போது வாரக்கணக்கில் ட்ரெண்டிங்கில் உள்ளது. தற்போது மீம் கிரியேட்டர்கள் கலாய்த்த கண்ணம்மா நடந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

நடந்துகொண்டே இருக்கும் கண்ணம்மா அமெரிக்கா சென்று அதிபர் ட்ரம்பை சந்தித்தது போலவும், நிலவுற்கு சென்றுள்ளதாகவும் சித்தரித்துள்ள மீம் கிரியேட்டர்கள் உச்சகட்டமாக கண்ணம்மா கைலாசாவிற்கே சென்றதாக ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதுபோதாது என்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்திற்கு கண்ணம்மா சென்றது போல சித்தரித்துள்ள மீம்களில் ‘கண்ணம்மா நீங்க இங்கையும் வந்துட்டீங்களா’ என கேட்பது போல இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

Views: - 92

0

0