த்ரிஷாவின் கல்யாணம் நின்றதற்கு அவங்க தான் காரணம்..- முதன்முறையாக உண்மையை வெளியிட்ட அம்மா..!

Author: Vignesh
19 April 2023, 12:15 pm

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

இதனிடையே, தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வரும் இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து இருக்கிறார். இந்த படத்தின் புரொமோஷனுக்காக இப்போது பிஸியாக பயணம் செய்து வருகிறார்.

trisha - updatenews360 1

ஏற்கனவே, பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம் நடிகை த்ரிஷா. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா.

trisha - updatenews360 1

இந்நிலையில், த்ரிஷாவின் அம்மா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, வருணுடன் த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் முடிந்தது குறித்து நிறைய விஷயங்கள் எழுதுகிறார்கள், ஆனால் உண்மை என்பது தங்களுக்கு தான் தெரியும் என தெரிவித்துள்ளார்.

trisha - updatenews360 1

மேலும், திரிஷா சினிமாவில் நடிக்கிறார் என்று தெரிந்து தான் பெண் பார்க்க வந்தார்கள் எனவும், பின் எல்லாம் தெரிந்து தானே நிச்சயம் செய்தார்கள் என்றும், திருமணத்திற்க்கு பிறகும் நடிக்கலாம் என்று சொன்னதாகவும், வருண் என்கரேஜ் செய்து கொண்டு இருந்தார், அதுதான் உண்மை எனவும், திரிஷாவின் திருமணம் நின்று போன விஷயத்தில் பெரியவங்க பல பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய பேர் இன்வால்வாகி இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்

trisha - updatenews360 1

ஒத்து வராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டு வாழுறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றும், சில விஷயங்கள் சரிப்பட்டு வரவில்லை என்றால் பிரிந்து விடுவது தான் பெட்டர் என திரிஷாவின் அம்மா பேசியுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?