மூன்றே நாளில் தளபதி 67 படத்தில் இருந்து விலகிய திரிஷா? இதுக்கு லோகேஷ் தான் காரணமாம்..!

Author: Vignesh
7 February 2023, 11:30 am
Quick Share

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார்.

அதோடு பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ, கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், வஸந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லலித் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

trisha - updatenews360 2

லியோ படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. பின்னர் மூணாறில் சில காட்சிகள் படமாக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாத இறுதியில் படக்குழு அனைவரும், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்றனர்.

அங்கு 2 மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். படக்குழுவினருடன் நடிகை திரிஷாவும் சென்றிருந்தார். அங்கு ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leo - Updatenews360

இந்நிலையில், காஷ்மீர் சென்ற 3 நாட்களில் நடிகை திரிஷா மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார். அவர் நேற்று முன்தினம், டெல்லி ஏர்போர்ட் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

அதாவது, லோகேஷ் படம் என்றால் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைவாக இருக்கும், அல்லது ஹீரோயினே இருக்க மாட்டார். அப்படி இருந்தால் அவர்களை கொன்றுவிடுவார்.

trisha krishnan - updatenews360

இதனால், முழு கதை கேட்ட திரிஷாவுக்கு கொஞ்சம் சங்கடத்தை கொடுத்துள்ளதாம். விஜய் படத்தில் ரீஎண்ட்ரி கொடுக்க நினைத்து கமிட்டாகிய திரிஷா லியோ படம் தொடர்பாக போட்ட பதிவை எடுத்துள்ளது சற்று சலசலப்பை கொடுத்துள்ளது.

ஆனால் விஜய்யுடன் எடுத்த புகைப்படம் மட்டும் அப்படியே இருப்பதால் திரிஷா லியோ படத்தில் இருந்து வெளியேறவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 269

0

0